இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்

ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு

Category ஆய்வு நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, புண்ணிய லோகம் இவைகளைப் பற்றி எளிமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எத்தனையோ பேர் ஆர்வத்துடன் இருந்தாலும் அதற்கான வழிகாட்டிகள் சுலபமாகக் கிடைக்காததனால் பல ஆர்வலர்கள் வழிதவறிப்போகக் கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால் நாஸ்திகவாதம் வலுப்பெறுகிறது என்பதை விட ஆஸ்திகத்தில் புதிய விஷயங்கள் வெளிவராமல் போகும் துயரம் ஏற்பட்டு விடுகிறது.
அந்த நிலையை மாற்ற மிகக் கடினமான பிறப்பு இறப்பு ரகசியத்தைப் பற்றிய கருத்துக்களை மிக எளிய முறையில் இந்தப் புத்தகத்தில் சொல்ல நான் முயன்றிருக்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக இங்கே நான் கூறி விடவில்லையென்றாலும்பெருவாரியான நம்பிக்கைகளுக்கும் சாஸ்திர கருத்துக்களுக்கும் ஓரளவு ஆதாரங்களைத் தந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில் உள்ள விஷயங்கள் இன்னும் எவ்வளவோ மறைந்தும் கிடக்கிறது. சொல்லப் படாமலும் இருக்கிறது. அவைகளையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு முழுமையான நூலாகத் தரவேண்டும் என்ற என் அவா வருங்காலத்தில் கண்டிப்பாக நிறைவேறும் என்றாலும் யானையின் மணியோசை போல் இந்தச் சிறிய நூல் மக்களின் அமானுஷ்ய அறிவுத் தாகத்திற்கு நிச்சயம் ஓரளவு பயன் பெறும் என்று உறுதியாகக் கருதுகிறேன். காரணம் இதுவரை அமானுஷ்ய துறையில் வெளிவந்துள்ள மற்ற நூல்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு பண்டைய கால சமய நூல்களையும் சாஸ்திர நூல்களையும் சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு :

ஆய்வு நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :