இலங்கையில் சமாதானம் பேசுதல் தொகுதி 1 - 2

ஆசிரியர்: கலாநிதி குமார் ரூபசிங்க

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 578
ISBN978-81-7720-110-9
Weight650 grams
₹990.00 ₹891.00    You Save ₹99
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



போர் நிறுத்த ஒப்பந்தம் பரவலான தாக்கங்களைக் கொண்டிருந்ததுடன், பேச்சுவார்த்தைச் செயல்முறைக்குத் தேவையான ஒரு கட்டமைப்பையும் உருவாக்கியது. எத்தகைய செயற்கையான காலக்கெடுக்களும் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடுகளின் இயல்பு, ஆயுதங்களைக் களைதல் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் பூர்வாங்கக் கலந்துரையாடல்களின் போது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என இருதரப்புகளும் முடிவு செய்திருந்தன. எனவே, மக்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், இருதரப்பினருக்கிடையிலான விசுவாசம் என்பன வெற்றிகரமான பேச்சுவார்த்தைச் செயல்முறை ஒன்றுக்கான மிகவும் அவசியமான ஒரு முன்நிபந்தனையாக இருந்து வருகிறது.
சமாதான செயல்முறையின் ஒட்டுமொத்த முயற்சிகளின் போது இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் மீண்டும் திரும்பிப்பார்த்தல், நோர்வே அனுசரணையாளரின் நம்பிக்கையை வென்றெடுத்தல், போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்லல் போன்ற பல முன்னெடுப்புகளின் மூலமாக ரணில் விக்ரமசிங்க உண்மையில் சமாதானத்தை எடுத்துவருவதில் வெற்றிகண்டிருந்தார். துணிச்சலான, புத்தாக்க இயல்புள்ள உத்திகள், நோக்கத்தில் தெளிவு ஆகியவற்றின் மூலம் செயல்பாட்டாளர்களின் குழுக்களை அணிதிரட்டியது, இதற்குத் தேவையாக இருந்த அளவுகடந்த பொறுமை போன்றவற்றைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலாநிதி குமார் ரூபசிங்க :

கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :