இஸ்லாத்தின் இணையற்ற வீரர்

ஆசிரியர்: வே. காசிநாதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹80.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நபிகளுடைய புனித தலமாகிய மதினாவிலிருந்து இங்கே வந்து இசுலாம் மார்க்கத்தைப் பரப்பியவர்களுள் ஷகீது சையது இபுராஹிம் என்பவரும் ஒருவர். அவர் முதன்முறை இந்தியாவின் வடபகுதியான சிந்துவிற்கு வந்து இசுலாம் மார்க்கத்தைப் பரப்பி வெற்றிகரமாக நாடு திரும்பினார். இரண்டாம் முறையாக இந்தியாவின் தென்பகுதியான மதுரைக்கு வந்து இசுலாம் மார்க்கத்தைப் பரப்பும் போது மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனோடு போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டிய மன்னன் கொல்லப் பட்டாலும் பின்னர் அவனுடைய மக்களின் முயற்சியால் ஷகீது சையது இபுராஹிம் கொல்லப்பட்டார். அவரை ஏர்வாடியில் அடக்கம் செய்தனர். அங்கே எழுப்பப்பட்ட கல்லறைதான் ஏர்வாடி தர்ஹா என்று அழைக்கப்படுகிறது.
ஷகீது சையது இபுராஹிமின் நல்லிணக்க உணர்வையும் தியாக மனத்தையும், இசுலாம் மார்க்க பரப்புப் பணியினையும் விளக்கும் வகையில் நபிகளின் தூதராக வந்த அவரை 'இசுலாத்தின் இணையற்ற வீரர்' எனப் போற்றும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்ஹா எழுந்த வரலாறு, மதுரையில் இசுலாமியரின் ஆட்சி, இசுலாமியரின் நெறித் தவறா வாழ்க்கை ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்நூல் வகை செய்கிறது.
இந்நூலை வழக்கறிஞர் வே. காசிநாதன் M.A., B.L., அவர்கள் அரிதின் முயன்று வரலாற்றுச் சான்றுகளுடன் எளிய ஆற்றொழுக்கான நடையில் எழுதியுள்ளார். அவர் பலநூல்களின் ஆசிரியர். இசுலாம் மார்க்கத்தைச் சாராத அவர் இசுலாம் மார்க்க நுட்பங்களுடன், வரலாற்றுணர்வு மேலோங்க இந்நூலைத் தொகுத்து வழங்கியிருப்பது அவருடைய நல்லிணக்க சகோதர மனப்பான்மையைக் காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. காசிநாதன் :

வாழ்க்கை வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :