இ.எம்.எஸ்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category வாழ்க்கை வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 304
Weight250 grams
₹175.00 ₹148.75    You Save ₹26
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பதவிகள் மீது பற்று கொள்ளாத மகத்தான தலைவர் அவர். வசதி படைத்த உயர் சாதியில் பிறந்திருந்தாலும் சாதாரண மக்களுக்குத் தொண்டாற்றுவதே தன் வாழ்க்கை இலட்சியம் எனக் கொண்டு மாளிகையிலிருந்து இறங்கி மண் குடிசைகளை நோக்கி நடந்தவர் இ.எம்.எஸ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)க்கு தலைமையேற்று, இடதுசாரி இயக்கத்திற்கு வலுசேர்த்த மாமனிதராக திகழ்ந்தார். அரசியல் என்பது பணக்காரர்கள் விளையாடும் பல்லாங்குழியாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், இப்படியும் ஒரு தலைவர் தேர்தல் ஜனநாயக அரசியலில் நெறி பிறழாமல் வாழ்ந்தார் என இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுவதற்கு இ.எம்.எஸ்.ஸைத் தவிர சிறந்த உதாரண புருஷராக இன்னொருவரைக் காட்டுவது சிரமம்தான்.
இது இ.எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு விழா தொடங்கும் வருடம். அவரது வாழ்க்கையும் போராட்டமும் இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் ஊட்டக்கூடியதாக இருக்கும் என்பதால் நண்பர் ஆதனூர் சோழன் மிகச்சிறப்பாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். பொதுவுடைமை சிந்தனை கொண்ட ஆதனூர் சோழன். தான் ஏற்றுக் கொண்ட பணியை ஆழமாகவும் நுட்பமாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். இ.எம்.எஸ். பற்றிய இந்த நூலையும் அதே ஆற்றலுடன் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

வாழ்க்கை வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :