ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

ஆசிரியர்: சி.புஷ்பராஜா

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatHardbound
Pages 676
ISBN978-81-7720-061-4
Weight800 grams
₹600.00 ₹570.00    You Save ₹30
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயக்கங்கள் தமது கொள்கைகளை வகுக்கும் போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி, எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும், இயக்கத்தை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். தமது சக போராளிகளையும் தமது மக்களையும் எதிரியைவிட மோசமாக அடக்கி ஒடுக்க, கொன்றுவீச அவர்கள் தயங்கவில்லை இயக்கங்ளைக் கண்டு மக்கள் பயம்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள். தாங்கள் இழைக்கும் தவறுகள் எவ்வளவு தூரம் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர மறுத்தார்கள் முடிவு, மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டார்கள்போராட்டத்தை வெறுத்தார்கள்....
இதுவரை எழுதப்படாத ஒரு நூலை புஷ்பராஜா எழுதும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்டிருக்கிறார். பேசப்படாத பல விஷயங்களை, பேசத் துணியாத தகவல்களை எழுத்திலே பதிவு செய்திருக்கிறார். நூற்றாண்டுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய தகவல்களை, அவர்களுடைய இயல்புகளைப் பற்றியெல்லாம் பதிவுசெய்து வைத்திருக்கிறார். ஜனநாயகம், விடுதலை, மனிதநேயம் என்கிற கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் கொள்கையான தனது கொள்கையை வலியுறுத்தியிருக்கிறார் என்ற வகையில் இந்த நூல் மிகவும் கவனிப்புக்கும் பாராட்டிற்கும் உரியது என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.புஷ்பராஜா :

சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :