உடையார் (பாகம்-3)

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardbound
Pages 512
Weight750 grams
₹420.00 ₹399.00    You Save ₹21
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவருடைய கதை சொல்வதற்கு இந்தப் பெண்மணிதான் ஏற்றவள் என்று உள்ளே முடிவு செய்தேன்.சரித்திரக் கட்டுரைகள் எழுதுவது வேறுவிதம். அங்கு தெரிந்ததை மட்டுமே பேச வேண்டும். தெரியாததை தெரியாதது என்று சொல்ல வேண்டும். இப்படி இருக்கக் கூடும். என்று யூகம்கூட தவறு என்று தான் சொல்வார்கள். ஆனால் இப்படி இருக்கலாம். என்ற யூகத்தை ஒரு சரித்திர ஆசிரியன் செய்யலாம். பஞ்சவன்மாதேவிதான் சோழ சரித்திரத்தின் ஆதாரமாக இருந்திருக்கக்கூடும் என்று அந்தப் பள்ளிப்படைக் கோயிலை பார்த்து அதன் கல்வெட்டுகளைப் புரிந்து கொண்டு உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் காலத்தில் இவள் முதன்மை பொருந்தியவளாக இருக்க வேண்டும். முக்கியமானவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இது முற்றிலும் உண்மை என்று ஆதரிக்கவும் முடியாது. இல்லை என்று மறுக்கவும் முடியாது. ஆனால் பஞ்சவன்மாதேவிக்கு பள்ளிப்படை கோயில் கட்டியிருந்தாலும், அந்தப்பள்ளிப்படை கோயில் நிறுவப்பட்ட இடமும் பஞ்சவன்மாதேவி கொடுத்த பல கொடைகளும், அவர்களைப்பற்றிப் பேசுகின்ற கல்வெட்டுக்கள் வெவ்வேறு ஊர்களில் இருத்தலையும், தஞ்சாவூர் கோயிலுக்குள் இருக்கின்ற ஓவியத்தில் நிற்கின்ற ராஜராஜர் அவருக்கு அருகே நின்று மூன்று தேவியர் சித்திரத்தையும் உற்றுப்பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை ஒன்று கூட்டி இந்தக்கதையை நகர்த்த துவங்கினேன்…

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :