உனக்குள் ஓர் உந்து சக்தி

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
ISBN978-81-8446-856-6
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இளைஞர்களிடம் அளவிடமுடியாத ஆற்றல் உள்ளது. அதை சரியான பாதையில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி பயின்ற பின் ஏதோவொரு தொழிலில் அமர்ந்திட மனம் துடிக்கும். கல்லூரி வளாகத்தினுள் மாணவராக இருந்துவிட்டு, புதிதாக தொழில் உலகத்திற்குள் கால்பதிக்கும் போது அது திக்கு தெரியாத காட்டில் இருப்பது போல் தோன்றும்.
தனக்குக் கிடைத்தது சரியான வாய்ப்புதானா, தொழிலில் வந்து சேரும் நண்பர்கள் நம்பகமானவர்கள்தானா, அவர்களை எப்படி எடைபோடுவது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ள வேண்டும், செய்யும் தொழிலில் வெற்றி தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அந்தந்த வயதில் சிந்தனையும் செயல்பாடும் எப்படி அமையவேண்டும், உள்ளிருந்து ஊக்க சக்தியை எப்படி பெற்றிடவேண்டும், பொருளாதார சூழலுக்கேற்ப எப்படி தயார் படுத்திக்கொள்வது, சமுதாயத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும் போன்ற வாழ்க்கைக்கு பயன்தரும் பல விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அது குடும்பமோ, தொழிற்கூடமோ, சிறப்பான தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு புரிந்துகொள்ளும் நிலை நிச்சயம் தேவை. உரையாடல் மூலம் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது என்பதை இப்புத்தகம் விளக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :