உலகப் பிரசத்தி பெற்ற நகைச்சுவைக் கதைகள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category கதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 400
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திடீரென்று ஒருநாள் முல்லாவின் வயதான தாயார் நெஞ்சுவலி கண்டு இறந்து போனார். அந்த மூதாட்டி இறந்ததும் முஸ்லீம் மதச் சடங்கு நெறிமுறைகளை முல்லா அப்படியே கடைப்பிடித்தார். ஆனால் அவர் தன் அன்னை இறந்ததற்காக் கறுப்பு உடையை மட்டும் அணியவில்லை . அவர் மட்டும் அல்ல, அவர் வீட்டில் உள்ளவர்களும் அந்த மாதிரி நடந்து கொள்ளும்படிச் செய்தார். எல்லா மதச் சம்பிரதாயங்களையும் குறைவற முல்லா கைக்கொண்டாலும், தன் தாயின் மரணத்தைக் குறித்துக் கூட முல்லா கறுப்பு உடை அணியாதது மிகவும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று மத பாதிரிமார்கள் தெரிவித்தனர். மசூதியைச் சேர்ந்த மதகுருமார்கள் ஒன்றுகூடிப் பேசி இனி இந்த மாதிரி எல்லாம் முல்லா செய்யக் கூடாது. ஊர் உலகத்தை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.அந்த வழியைப் பின்பற்றுவதாக அவர்களுக்கு முல்லா வாக்குறுதி கொடுத்தார்.
இரண்டொரு வாரங்கள் சென்றன. முல்லாவின் வீட்டுக் கோழிக்குஞ்சுகளுடைய கழுத்தில் கறுப்புப் பட்டைகள் காணப்பட்டன. அவைகள் அங்கும் இங்கும் இரை தேடி அலையும்போது அவை அணிந்திருந்த கறுப்புப் பட்டைகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ந்து போயினர்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

கதைகள் :

பாரதி பதிப்பகம் :