உலகம் போற்றும் உன்னத தினங்கள்

ஆசிரியர்: A. திவ்யதர்ஷிணி

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 112
Weight100 grams
₹40.00 ₹34.00    You Save ₹6
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் நாளினை ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வருகின்றனர். உலகத்திலுள்ள கிறித்துவர்கள் அனைவரும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் தேவாலயத் தில் கூடுகின்றனர். நள்ளிரவு சரியாக 12 மணியானதும் தேவாலயத்தில் பிரார்த்தனைகள் துவங்குகின்றன. துவங்கும் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரும் எத்துயரும் இன்றி சகோதர மனோபாவத்துடன் வாழ பிரார்த்தனை செய்யப்படுகிறது. உலகில் அமைதி நிலவ வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெறும்.
இளைஞர்கள் பாட்டும் கேளிக்கையுமாகத் தத்தம் நண்பர்களுடன் கூடிக் களிக்கிறார்கள். நம் நாட்டிலும் இத்தகைய கொண்டாட்டங்களும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இதில் ஒரு சிறப்பு என்னவெனில் நம் நாட்டில் கிறித்துவர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் திருக்கோயில்களுக்குச் சென்று பிறக்கும் புத்தாண்டு தங்களுக்குச் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டி இறைவனை வழிபட்டு வருவதுதான். இவ்விதமாக உலகத்தவர்கள் அனைவரையும் சாதி சமய, இன வேறுபாடின்றி ஒன்றுபடுத்தும் ஜனவரி முதலாம் நாள் ஓர் பொன்னாள்தான் என்பதில் சந்தேகமேயில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
A. திவ்யதர்ஷிணி :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :