உலகின் நாக்கு

ஆசிரியர்: நவீன்.ம

Category கவிதைகள்
Publication கடற்குதிரை பதிப்பகம்
Pages N/A
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பலகட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி என தொடர்ந்துவரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளை கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும். காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது... உயிர்ப்புள்ள ஒரு இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் என கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றி தான் என உணரும் தானறியா தன்னிலை ஒன்றை புனைவுகள் - முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்டபின் தான் கண்டவற்றைத் தன்மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது. - ஜெயமோகன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :