உள்ளே வாருங்கள்

ஆசிரியர்: இரா. சரவணமுத்து

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
ISBN978-93-80218-90-8
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனம் என்பது ஒரு மாயக்குகை போன்றது. எல்லாச் செயல்பாடுகளுக்கும் மனமே காணரமாகிறது. மனம் உடையவன் மனிதன் என்பர். எனவே மனம்தான் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. பருப்பொருள், நுண்பொருள், புறச்சிந்தனை, அகத்துணர்வு போன்ற அனைத்துக்கும் மனமே காரணம். மனம் நுண்பொருள் சார்ந்து செயற்படும் நிலைகளை அறிவியல் கண்கொண்டும் உணர்ச்சி வயப்பட்டும் இயங்கும் நிலையில் அதன் செயற்பாடுகள் அதிகம்.
'உள்ளே வாருங்கள்' என்னும் இந்நூல் மனம் என்னும் மந்திரச் சாவியைக் கொண்டு உள்ளக் கோயிலைத் திறந்து உள்ளிருக்கும் ஒளியிறையை வழிபடும் நிலையில் தோன்றும் விந்தைகளில் சிலவற்றை வகைப்படுத்தும் வண்ணம் அமைந்து கற்போருக்குக் களிபேருவகை ஊட்டுகிறது. நுட்பமான மனத்தின் இயல்புகளை உணர்ந்து அறிவியல் பூர்வமாக விளக்க முயன்றுள்ளார் ஆசிரியர் சரவணமுத்து அவர்கள். அகம் சார்ந்த உணர்வுகளைப் புறச் செயல்களுடன் புரிந்து கொள்ள வைக்க முயன்று வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. சரவணமுத்து :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :