ஊட்டிவரை உளவு

ஆசிரியர்: என்.சி.மோகன்தாஸ்

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 172
Weight250 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஹாஸ்டல் வார்டனின் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களிடம் இருந்தது வாஸ்தவம். - பியூன், கதவிடுக்கிலும், ஜன்னல் வழியும் எட்டிப் பார்த்தவர்களை விரட்டியடிக்க, அவர்கள் வெராண்டாவில் முரண்டுபண்ணி முறைத்தனர்.
“தம்பிகளா! எனக்கு திட்டு வாங்கி வைக்காம வெளியேப் போங்க!"
“இங்கே நின்னா உங்களுக்கு என்ன வலிக்குதாம்!" "நான் புள்ளைக்குட்டிக்காரன்!" “ஹா! அதுக்கு நாங்களா பொறுப்பு?”
“ஐயோ-மாதாவே! உங்களுக்குச் சொன்னாப் புரியாது. இங்கே இப்படிக் கூட்டம் போட்டீங்கன்னா, வார்டன் என்னை வேலையை விட்டு துரத்திடுவார். ப்ளீஸ்... வெகேட்!"
“சேச்சே! போன்னு சொன்னா போயிட்டுப் போறோம்! அதுக்காக ஏன் இப்படி இங்கிலீஷ்ல பேசி கொல்றீங்களாம்?"
கூட்டம் அங்கிருந்து விலகினாலும்கூட அடங்கிவிடவில்லை. பின்பக்கம் ஓடி மரத்தில் தொற்றி, வானர அவதாரத்துடன் வார்டன் தெரிகிறாரா என்று வேவு பார்க்கத் துடித்தன.
உள்ளே என்ன நடந்தாலும் அதை அப்போதே பார்ப்பதில் ஒரு திரில். கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் செய்திகளிலும் செய்தித் தாள்களிலும் வந்தாலும்கூட நேரடி ஒளிபரப்பில் அவர்கள் ஆடும் போதே பார்ப்பதில் ஒரு உற்சாகம் சுவாரஸ்யம்!
வார்டன் ஃபாதர் அன்னாசி, சிக்கனத்தை உடல் பருமனிலும் கடைபிடித்து, தாடியிலும் வெளிப்படுத்தி தாடையில் மட்டும் கொஞ்சம்

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சி.மோகன்தாஸ் :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :