எண்ணியம் (சாங்கியம்)
ஆசிரியர்:
குணா
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%29?id=1796-1441-9281-8627
{1796-1441-9281-8627 [{புத்தகம் பற்றி ஆரிய உலகத்தின் வரலாறு முழுவதையும் உள்ளடக்கிய எண்
<br/>ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும் இடையிலிட்டபாலத்தின் முதல் தோரணவளைவு வேதமேயாயின், காண்ட் எழுதியதூய பகுத் தறிவின் மீதான திறனாய்வு (CritiqueofPreReuSCO) என்ற நூல் அதன் கடைசித் தோரணவளைவாகும். வேதத்தில் குழந்தைப் பருவத்தைக்காணுகிற நாம்,காண்ட் எழுதிய திறனாய்வு நூலில் ஆரிய மனத்தின் நிறைவான ஆண்மைப் பருவத்தைக் காண்கி றோம், வருங்காலத்து மெய்யினமாயிருக்கும் (Race) ஆங்கிலம் பேசும் மெய்யினத்திற்குக் கிடைத்துள்ள வேதத்தைப் போன்ற விலைமதிப்பிலா இன்னோர் ஆரிய மரபுரிமைதான் காண்ட் எழுதிய 'திறனாய்வு' என்ற நூல்காண்ட் எழுதிய தூய பகுத்தறிவின் மீதான திறனாய்வு என்ற நூலை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த மாக்சுமுல்லர்(1823-1900), அந்த நூலில் உள்ள மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையில் மேற்கண்டவாறு எழுதி ஆரிய இனவெறிக்குக் கொம்பூதினார். -
<br/>ஆரியக் கூத்தாடிய செருமானிய அகப்புறச் சூழல், மாக்சுமுல் லரைச் சங்கத மயக்கத்தில் பொத்தி வைத்தது. அவர் எழுதிய The Sir Systems of Indian Philosophy என்ற இன்னொரு நூலும் அதற்குச்சான்றுரைக்கும். உத்தர மீமாஞ்சை (வேதாந்தம்), பூர்வ மீமாஞ்சை, சாங்கியம், ஒகம், ஞாயம், வைசேடிகம் என்ற ஆறினையும் பிராமண மெய்யியல்களாக அந் நூலின் வழியாக அவர் கற்பித்தார்.
<br/>இவற்றில், உத்தர மீமாஞ்சை, பூர்வ மீமாஞ்சை என்ற இரண் டினைத் தவிர, பிற நான்கும் பண்டைத் தமிழர் கண்ட மெய்யியல் விளக்கங்களாகும். ஐரோப்பியரின் சங்கதக் காழ்ப்பும் ஆரிய இன வெறி நோக்கும் இவ் வுண்மையை மூடி மறைத்தன.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866