எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

ஆசிரியர்: கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்

Category அரசியல்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 166
ISBN978-81-908551-9-8
Weight200 grams
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்று ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்குப் பெரும் தடையாக இருப்பது அரசியல் இஸ்லாம். ஆனால் இஸ்லாத்தின் இயல்பையும், ஒடுக்குறைக்கு எதிரான அதன் போர்க்குணங்களையும், அது இன்று அரசியல் இஸ்லாமாக உருவெடுக்கக் காராணமாக இருந்த - சிந்தனையாளர்களையும் பற்றிப் புரிந்துகொண்டவர்கள் வெகுசிலரே.இந்த நூலில் அனஸ் அசதாபாத்தில் பிறந்த சையத் ஜமாலுத்தீன் ஆப்கானி எவ்வாறு தமது புரட்சிகர இஸ்லாமிய இயக்கச் சிந்தனை மூலம் மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினார் என்னும் கதையை விவரிக்கிறார். மேலும் ஆப்கானி இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு மனித வாழ்க்கைக்காக மறுவிளக்கம் அளித்ததோடு, சமயத்தையும் அரசியலையும் மனித விடுதலைக்கான முக்கிய விசையாக எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.இதை அனஸ், நவீன சிந்தனையையும் சமய புத்துயிர்ப்பையும் ஆப்கானி எவ்வாறு கையாண்டார் என்பதில் தொடங்கி, இஸ்லாத்தையும் இஸ்லாமிய அகிலத்தையும் ஒருங்கிணைப்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, சமூகத்தை அரசியல்மயமாக்குதல், மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக வெகுமக்கள் எழுச்சியை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் பயன்படுத்துதல் போன்றவற்றினூடாக விவரிக்கிறார். - அதேவேளை ஒற்றை இஸ்லாமிய அரசிலும் இஸ்லாமியச் சட்டத்திலும் , ஆப்கானிக்கு இருந்த விமர்சனத்தையும் முன்வைக்கிறார். இதன்மூலம் இந்நூல் ஆப்கானியின் தத்துவம் எவ்வாறு சமயத்தைப் பகுத்தறிவு மூலமாக அணுகுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. என்பதை விளக்குகிறது. அத்துடன் சமயத்தின் பங்கு சமூகத்தில் பயன்பாட்டுவாதமும் செயல்பாட்டுப் பார்வையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் :

அரசியல் :

அடையாளம் பதிப்பகம் :