எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!

ஆசிரியர்: விகடன் பிரசுரம்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 184
ISBN978-81-8476-469-7
Weight200 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், குறைவான மெனக்கெடுதலில் செய்யக்கூடிய காய்கறி விவசாயம் குறித்த இந்த நூல் காலத்தே உதவும் என்பது நிச்சயம். பசுமை விகடன் இதழில் வெளிவந்த காய்கறி சாகுபடி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து, இன்றைய நிலவரங்களுக்கு ஏற்றபடியான விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்து, எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்!

"ஒரு ஏக்கரில் சராசரியாக 10 டன் கத்திரி கிடைக்கும். கேரள வியாபாரிகள், தோட்டத்துக்கே வந்து, எடை போட்டு வாங்கிக்கிறாங்க. இன்னிய நிலைமைக்கு ஒரு கிலோ கத்திரிக்கு 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை கொடுக்குறாங்க. இயற்கை விவசாய விளைபொருள் அங்காடி வெச்சுருக்கறவங்களும் தேடி வந்து வாங்குறாங்க. ஆனால், இயற்கை கத்திரிக்காய்னு கூடுதல் விலையெல்லாம் வெச்சுக் கொடுக்குறதில்ல. நஞ்சில்லாத காய்கறியை உற்பத்தி பண்ணி கொடுக் கறோம்ங்கிற மன நிறைவே எனக்கு போதுமானதா இருக்கு”.

உங்கள் கருத்துக்களை பகிர :
விகடன் பிரசுரம் :

விவசாயம் :

விகடன் பிரசுரம் :