எல்லா உயிரும் பசி தீர்க

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Pack
Pages 64
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்த பூமியில் நமக்கு நண்பர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். தீங்கு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பூச்சி, ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தொட்டுத்தாவிப் போகும் போது தான் மகரந்தம் சூல்முடியுடன் சேர்ந்து, அதன் உயிர் விளைவாக 'விதை' உருவாகிறது. அப்படியிருக்க, அந்தப் பூச்சி எப்படி நமக்கு எதிரி ஆகும்? இதை பகுத்துப்பார்த்து அறிந்து கொள்ள, எது நம்மோடு போட்டி போடுகிறது ? எது நம்மோடு போட்டி போடவில்லை? என்பது நமக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். நெல்லைத் தாங்குகிற வைக்கோல், பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால், அந்த வைக்கோலின் முழு பலத்தை புரிந்து கொள்ளும் போது இந்த உலகம் ஒரு குலுங்கு குலுங்கும்.
மசானபு புகோகாவுடைய இந்த வரிகளை வாசித்த பொழுது, உடம்பெல்லாம் புல்லரித்து எனக்கு ஒருநொடி நிமிர்ந்து உட்கார வேண்டுமெனத் தோன்றியது. இந்த பூமியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது!


ஈரோடு புத்தகத் திருவிழாவில் நம்மாழ்வார் ஆற்றிய இந்த நீண்ட உரையையும், அதன்வழி அவருடைய குரலையும் கேட்கும் போதெல்லாம் அந்த காலகட்டமும், அதுதந்த உயிர்ப்பான தருணங்களுமே எங்கள் ஞாபகத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது. புத்தகத் திருவிழா நிகழ்வதற்கு இரு நாட்கள் முன்பே, நம்மாழ்வார் ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோட்டுக்கு அருகில் வசிக்கும் மோகனசுந்தரம் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். மோகன் சுந்தரத்தைப்பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் ஐயா, "பெரிய மீசை, கருத்த உடம்போட, ஒரு புல்லட்ல தடதடன்னு வந்திறங்கி, கடகடன்னு பேசிட்டு ... எல்லா பக்கமும், நிறைய ஆட்கள்கிட்ட என்னைய அந்த புல்லட்ல வச்சு கூட்டிட்டு சுத்தியலைஞ்ச ஒரு ஆளுய்யா. சேகுவேராவோட 'மோட்டார் சைக்கிள் டைரிஸ்' படத்த பாக்கும்போதும், யார்கூடயாவது புல்லட்ல அலையும்போதும் எனக்கு மோகனசுந்தரம் ஞாபகம்தான் வரும்” என்று நெகிழ்ந்துபோய் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். “புதிதாக ஒரு செயலை முயன்று பார்ப்பதிலும், அதை மக்களிடம் கொண்டு சென்று பரவலாக்குவதிலும், அதை அறிவியல் தொழில் நுட்பமாக மாற்றுவதிலும் மோகனசுந்தரம் நுட்பமான ஆள். அதுபோலவே, அவர் குடும்பத்தில் உள்ள நபர்களும். அவருடைய மகள் ஒரு சிறந்த ஓவியராக இருக்கிறார்' என்பதுதான் அவரைப்பற்றி ஐயாவின் எளிமையான நிலைப்பாடு. புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய நாள் இரவு முழுக்க ஐயா மோகனசுந்தரம் வீட்டில் தங்கியிருந்து, பார்க்க வந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :