எல்லா நாளும் கார்த்திகை

ஆசிரியர்: பவா செல்லதுரை

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 208
ISBN978-93-80545-64-6
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது.

நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறேன். 19.டி.எம்.சாரோன் என்பது பவாவின் இல்ல முகவரி மட்டுமில்லை, நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரியும் அதுவே என்று எஸ்.ராமகிருஷ்ணனும்

இடதுசாரி இலட்சியவாதம் என நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென பவாவை எண்ணிக் கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டும் பார்க்கக்கூடியவர். எந்தக் கரன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலாவாணி அதிகமென பவாவை கொண்டே நான் நம்பி வருகிறேன். ‘அறம்’ வரிசை சிறுகதை கதைமாந்தர்களின் உலகைச் சேர்ந்தவர் அவர் என ஜெயமோகனும் இத்தொகுப்பின் மூலம் மதிப்பிடுகிறார்கள்.

பவா எழுதியிருக்கும் அவரோடு பழகிய, அவர் அறிந்த மனிதர்கள் பற்றிய இந்தச் சொற்சித்திரத்திற்கு என்னை ஏன் முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டார் என்று எனக்குப் புரியவில்லை. சிறு பத்திரிகைச் சூழலில் சில நண்பர்களால் மட்டுமே அறியப்பட்டவன் நான். இந்த ஒரு தகுதி தவிர வேறு காரணம் ஏதும் எனக்கிருக்க முடியாது. மீவாவை அறிவதற்கு முன் தோழர் ஷைலஜா அவர்களின் சிதம்பர நினைவுகள்' மலையாளத்திலிருந்து தமிழில் வெளிவந்த போது நான் அவர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். எனது மகன் விஜி மூலம் பவாவையும், தோழர் ஷைலஜாவையும் தொடர்பு கொண்டேன். காலப்போக்கில் நான் அறிந்து கொண்டது பவா இடதுசாரி, த.மு.எ.ச பொறுப்பில் இருப்பவர், மற்றும் களப்பணி, கலை இலக்கியம் சம்மந்தமாக நிகழ்ச்சிகளைத் திருவண்ணாமலையில் நடத்திக் கொண்டிருப்பவர், இலக்கிய நண்பர்களோடு தொடர்பு கொண்டிருப்பவர் என்பது மட்டும்தான். 2008 ஆம் ஆண்டு சேலம் பாலம் புத்தகக் கடையில் பவாவின் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அவரோடு தொடர்பு கொண்டு எனது பாராட்டுதலைத் தெரிவித்தேன்,

உங்கள் கருத்துக்களை பகிர :
பவா செல்லதுரை :

கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :