எளிமைத் தமிழ் இலக்கணம்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category இலக்கியம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper back
Pages 120
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கணம் என்றாலே சில மாணவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். அதை வேப்பங்காயாக எண்ணி வெறுத்து ஒதுக்குகின்றனர். இலக்கணத்தைச் சற்றுப் பொறுமையோடும் புத்திக் கூர்மையோடும் அலசினால் மிக எளிதாக இருப்பதை உணர முடியும்.
இலக்கணம் எளிதாகி விட்டால் - தேர்வில் மதிப்பெண் சுளைசுளையாக - சுலபமாகப் பெறலாம்.
அது மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையில் இலக்கண மரபோடு பேசவும் எழுதவும் தெரிந்திருந்தால் அதனால் நமக்குப் பெருமை வந்து சேரும்.
இலக்கண நூல் என்பதால் வழக்கமான பத்திரிக்கைப் பாணித் தமிழ் நடையிலிருந்து விலகி, இலக்கிய நடையைச் சற்றுப் பின்பற்றியிருக்கிறேன்.
இலக்கணம் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருந்தாலும் படிப்பவர்களைப் பயமுறுத்தாத வண்ணம் மிக எளிய முறையில் தலைப்புகளை அணுகியிருக்கிறேன். வேறு பல நூல்களைப் படித்தவர்கள் இதை நன்றாக உணர முடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, முறைப்படி எழுதவும் பேசவும் விரும்புபவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.
தமிழ்கூறு நல்லுலகம் என் முயற்சிக்கு ஆதரவு கூறும் என நம்புகிறேன்.
அன்பன்
லேனா தமிழ்வாணன்
31-5-80
சென்னை - 17

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

இலக்கியம் :

மணிமேகலைப் பிரசுரம் :