எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்

ஆசிரியர்: எஸ்.ஏ. பெருமாள்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
Format Paperback
Pages 378
ISBN978-93-81095-67-6
Weight250 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நல்ல கருத்துகள் இல்லாத எழுத்துகள் சமூகத்திற்கு எந்த நற்பயனையும் தராது. ஆடுவதற்கு சரியான அரங்கம் இல்லையேல் திறமையாக விளையாட முடியாது. அதே போல அறிவைப்பெருக்குவதற்கு உதவும் நல்ல நூல்களைப் படிக்காமல் கற்றோரிடம் பேசுதல் மதிப்பு தராது.
நல்ல நூல்களை எழுதுவோர் தமிழில் குறைந்த எண்ணிக்கையில் தானிருக்கிறார்கள். இதில் எஸ்.ரா. முக்கியமானவர். இவர் எழுதிய ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை நான் வாசித்திருக்கிறேன். எழுதுவதற்காகவே வாழுகிற எழுத்தாளர் எஸ்.ரா. தமிழிலக்கியங்கள், இந்திய உலக இலக்கியங்களை வாசித்துக் கரைத்துக் குடித்தவர்கள், தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே இப்படி எழுதிக் குவிக்க முடியும். மேலும் இளவயதிலே தேசாந்திரியாகத் திரிந்து பெற்ற கள ஆய்வுகளும் அனுபவங்களும் எஸ்ராவை எழுத்துக் கோட்டையில் அமர வைத்துள்ளது.
ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் எஸ்.ரா.வின் படைப்புலகைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்புகளை அடையாளம் காட்டுவதற்கும் நாற்பதிற்கும் மேலான விமர்சனக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒரு இளம்வாசகன் தமிழின் முக்கியமான தொரு படைப்பு ஆளுமையை சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.ஏ. பெருமாள் :

கட்டுரைகள் :

உயிர்மை பதிப்பகம் :