ஏரணம்

ஆசிரியர்: குணா

Category ஆய்வு நூல்கள்
Publication குணாவிய அறக்கட்டளை
FormatHardbound
Pages N/A
Weight650 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




நாடிழந்து இறைமை இழந்து மண்ணிழந்து கொடியிழந்து கொற்றமிழந்து வடுகர்களிடம் பகிணறு ஆண்டுக்காலம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலையில், தமிழரின் மெய்யியலும் அறிவியலும் அளவையியலும் வடுகர் புரந்துவந்த பிராமணியத்தில் புதைக்கப்பட்டது. அறிவு மரபு என்றவொன்று தமிழர்க்கு இருந்ததே இல்லையென்று ஆளவந்த வடுகம் இளக்காரம் பேசியது.வடுகர்களிடமிருந்த ஆட்சியுரிமையைப் பறித்துக்கொண்ட ஆங்கிலேயர்கள், 'இந்திய அரசு' என்னும் ஓர் அரசியல் கட்டுமானத்தை உருவாக்கினார். தாம் உருவாக்கிய 'இந்தியம்' எனும் களிமண் உருவத்துக்கு ஆங்கிலேயர் 'இந்து' என்னும் உயிர் கொடுத்தனர். '_ 'இந்திய' மெய்யியல் என்பது பிராமண மெய்யியலே என்று எண்ணிய ஆங்கிலேயர்க்கு ஆரியப் பித்தேறிய பிற ஐரோப்பியர் முட்டுக்கொடுத்தனர்,இதனால், இந்திய மெய்யியல் என்பது சமற்கிருதத்தோடு பிறந்து சமற்கிருத்தின் மாடாக வளர்ந்தது எனும் பாடம் நெடுங்காலம் கொலுவிருந்தது. இந் நிலையில், தமிழர்களின் மெய்யியல் மரபையும், அதன் அறிவியல் செறிவையும், இயங்கியல் முறைமையையும் சமற்கிருத நூல்களில் பொத்தி , வைக்கப்பட்டிருப்பதைத் தமிழர் உலகிற்கு உணர்த்தவும் தமிழிய அறிவு மரபுகளை வெளிக்கொணரவும் எண்ணினேன்; எள்ளால் ஆனதைச் செய்தேன்.அந்த முயற்சியின் விளைவாக 'எண்ணியம்', (ஆசீவகத்தையும் சிறப்பியத்தையும் , விளக்கும் வள்ளுவத்தின் வீழ்ச்சி', (உலகாய்தத்தைப் போதுமான ஆளவு) விளக்கும்) 'தமிழர் மெய்யியல்' ஆகிய நூல்கள் பிறந்தள.விடுபட்ட தமிழர் மெய்யியல் கூறான ஞாயம்' எனப்படும் அளவையியலலத் தமிழிய நோக்கில் எழுத யாருமே முன்வராத நிலையில், வேறு வழியின்றி, நானே எழுதத் துணிந்தேன். அதனால் வந்ததே ஏரணம்' எனும் இந் நூல் தொல்காப்பியத்தில்தான் ஏரணத்தின் (அளவையியலின்) மாற்றுக்கண் உள்ளதேயன்றி, ஐரோப்பியர்கள் சொல்வதைப் போல் கிரேக்க நாட்டு அரிசுட்டாட்டிலின் நூல்களில் இல்லை. இதளையும் மெய்ப்பித்துக் 'காட்டவே 'ஏரணம்' என்னும் இந் நூல் பிறந்தது,

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

ஆய்வு நூல்கள் :

குணாவிய அறக்கட்டளை :