ஏலாதி ( மூலமும் உரையும் )

ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹50.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மிகச் சிறந்த நீதி நூல் - ஏலாதி கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்த புலவர்களால் அவை தொகுக்கப்பட்டன. நச்சினார்க்கினியர் போன்ற சிறந்த உரையாசிரியர்களால் மேற்கோளாக இந்நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. தற்சிறப்புப் பாயிரம், பாயிரம் உட்பட எண்பத்திரெண்டு வெண்பாக்களைக் கொண்டுள்ளது இந்நூல். இதன் ஆசிரியர் யார் என்று விளங்கவில்லை . ஆசிரியரின் காலம் கடைச்சங்க காலத்திற்கு பிற்பட்டது என்பது தெளிவு.
இந்நூலிற்கு ஏலாதி என்ற பெயர் வரக் காரணம் ஏலம் + ஆதி என்பதன் புணர்ச்சியே ஏலாதி என்ற சொல்லாகும். ஏலம் முதலான பலவகையான மருந்துப் பொருள்களின் பொடிக்கு ஏலாதி என்று பெயர். ஏலம் ஒரு பங்கும், இலவங்கப்பட்டை இரண்டு பங்கும், சிறு நாவற்பூ மூன்று பங்கும், மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும், சுக்கு ஆறுபங்குமாகச் சேர்த்துச் செய்யப் பெறுவது ஏலாதியாகும். இதனை ஏலாதிச் சூரணம் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
இம்மருந்து மக்களின் உடல் நோயைப் போக்கும். உடலிற்கு வலிமையும் வனப்பையும் தரும். அதுபோலவே இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் உள்ள ஒவ்வொரு நீதியும் ஏலாதிச் சூரணம் போல் இருக்கிறது. படிக்கும் மக்களின் அறியாமை இருளைப் போக்கி, உயிருக்கு உறுதி பயக்கும் மெய்யுணர்வை அளிக்கவல்லது. எனவே ஏலாதி என்பது உவமை ஆகுபெயராக நூலிற்குக் காரணக் குறியாக ஆயிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.சம்பத் :

அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :