ஓங்கி உயர ஆசை

ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து

Category கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Pack
Pages 144
ISBN978-93-87707-22-1
Weight150 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'ஐயாவென ஓங்கி என்ற திருவாசக வரியும், 'ஒங்கி உலகளந்த உத்தமன்' என்ற திருப்பாவை வரியும் கண்ட அந்தக்காலம் முதல், உயரம் கூடுதலாக இருந்தால்தான் மதிப்பு என்றே உயரம் கூட்டிக் காட்ட காலில் 'ஹை ஹீல்ஸ்' அணிந்து நடக்கும் இந்தக் காலம் வரையில், எல்லாக் காலங்களிலும் மனித உள்ளங்களில் உயரத்திற்கு ஓர் உயரமான இடம் இருக்கிறது. உயரம் என்பது மதிப்பு, உயரம் என்பது அழகு, உயரம் என்பது கம்பீரம், உயரம் என்பது நிறைவு, உயரம் என்பதே தரும் உயர்வு என்ற வகையிலான எண்ணங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. உடல் உயரம் என்பதில் எனக்கென்ன வெகுமதி? மரபணுக்களின் வழியே கடத்தப்பட்டு பெறுவது அது. வாழ்வின் உயரம் என்பதே எனக்கான வெகுமதி அதுவே நான் அடைவது. உயரம் என்பது . கொடுக்கப்படுவதல்ல, அடையப்படுவது. ' இந்த நூலின் ஏதாவது இரண்டு கருத்துகள் உங்களுக்குள் ' நுழைந்தால், அதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் உயரம் கூடும், அதன் வழியே என் உயரமும் கூடும் என்பது என் நம்பிக்கை .

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமன் பச்சைமுத்து :

கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :