ஓசோன் படலத்தில் ஓட்டை
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?id=1725-7874-6208-2162
{1725-7874-6208-2162 [{புத்தகம் பற்றி மனித குலத்தை மீட்டெடுக்கப் பலரும் முயன்று வருகிறார்கள். நீர் மாசு, நிலமாசு, காற்றுமாசு என்று அனைத்தும் சிதைவடைந்துள்ளன. இதனால் சுகாதாரம் கெடுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு நாளும் புதிய புதிய நோய்களின் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகிறது. மேலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வேமாக சீறிப்பாயும் விண்கலங்கள், ஏவுகணைகள் போன்றவைகளும் இயற்கை மாசுக்குக் காரணமாகின்றன. இயற்கை மாசு இறுக்கமடைந்து ஓசோன் படலத்தை அரித்து சிதைப்பதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. இதன் வழியாக சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமியைத் தாக்குவதால் பூமியில் வெப்பம் அதிகமாகிப் பூமியும் வெப்ப மண்டலமாக மாறுகிறது. மனித குல வாழ்வும் பாதிக்கப்படுகிறது.
<br/> இச்சூழ்நிலையில் பூமியைப் பாதிக்கும் உணர்வை இளமையிலேயே, மாணவப் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஓசோன் படலம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அது சிதைவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன? அதனை பாதுகாப்பது எப்படி? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைகாணத் தூண்டும் வகையில் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை என்னும் நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866