ஓச்சை

ஆசிரியர்: மீரான் மைதீன்

Category கதைகள்
Publication புலம்
FormatPaper Back
Pages 164
ISBN9788190788618
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சொற்களில் அழகானவை, அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன், எளியவர்களின் மொழியையும், அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி - எழுதியிருக்கிறார். இயற்கையின் பெருங்கருணையால் வசப்பட்ட வாழ்வு வன்மத்தின் பிடியில் சிக்கும்போது, கொலையும் பழியுமாக எவ்வாறு வதைபடுகிறது என்பதைச் சொல்கிறது ஒச்சை.
பரிவும் தர்க்கமும் கொண்டு வாழ்வின் அநித்தியத்தை உணர்ந்தவனான கோயாவின் வாழ்வு சிதைபடுவதைச் சுற்றி விரிகிற கதைக்களம், பாவம் ஒரு பக்கமும் பழி மறுபக்கமாய் வேறு வேறு திசைகளில் செல்லும் எளிய மனிதர்களின் வாழ்வை அவர்களுக்கேயான பாடுகளோடு விவரிக்கின்றது. சுற்றியுள்ள மனிதர்களின் நல்லதும் பொல்லாததுமான வார்த்தைகள் உருவாக்கிய சிறகு முளைத்த கதைகள் வெளியெங்கும் திரிய, வலியாற்றங்கரை மணலில் நாமும் கால் பதிய நடக்கிறோம்; ஒவ்வொரு பாத்திரத்தையும் சந்தேகத்தோடு பின்தொடரச் செய்கிற மீரானின் மொழி, அதிகாரத்தின் கரங்கள் நிராதரவான மனித வாழ்வில் கடுமை கொள்ளும்போது, அந்த நெருக்கடியை, பயத்தை நம்மிடம் கடத்துகிறது. கேட்க நாதியற்றவர் வாழ்க்கை யாரும் சிதைத்திடக்கூடிய மணல் வீட்டைப் போன்று நிர்கதியாய் நிற்கின்றது எனச் சித்திரமாக்கும் அவர், கண்ணீ ரையும் சாபத்தையும் தவிர அவர்களால் இயன்றது வேறென்ன? மிச்சமிருப்பது ஒச்சைகள்தானே... என நம்மிடமே கொடுக்கிறார் திரை மூடும் கயிற்றை.
- ந. கவிதா

உங்கள் கருத்துக்களை பகிர :
மீரான் மைதீன் :

கதைகள் :

புலம் :