கங்கை கொண்ட சோழன் (பாகம் -3)

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardbound
Pages 520
Weight700 grams
₹435.00 ₹413.25    You Save ₹21
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என்னுடையது சரித்திர புதினம். இதில் சரித்திரம் கொஞ்சம். புதினம் அதிகமாகவும் இருக்கும். அதாவது உண்மையான தகவலும், இப்படி இருந்திருக்கக்கூடும் என்ற கற்பனையும் இருக்கும். இப்படி ஒரு வெற்றி இருந்தால் எப்படி இருக்கும் வாழ்க்கை. இவ்வளவு தூரம் நடக்க வேண்டுமென்றால் என்னென்ன வேதனைகள் இருந்திருக்கும். இந்த காடுகளை எப்படி அறுத்து போயிருப்பார்கள். காசிக்கு என்ன வழி. அங்கே எங்கு தங்கியிருப்பான். எல்லா இடமும் மாறிப் போயிற்றே. மாறாதது என்ன. எந்த இடத்தில் மிலாடுடையாரும், இன்னும் இரண்டு தளபதிகளும் மாண்டு போனார்கள். எங்கே அந்த சின்னங்கள். கொள்ளிப்பாகை எங்கிருக்கிறது என்றெல்லாம் தேடினேன்.
இன்னும் உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டு மென்றால் இந்திரதத்தன் கைது செய்யப்பட்டு சோழதேசம் அனுப்பப்பட்டது நிஜம். அவன் மகன் இறந்தது நிஜம். எப்படி இறந்தான் தெரியாது. நான் இந்திரதத்தனே கொன்றுவிட்டான் என்று கற்பனை செய்தேன். அதற்கு வலுவான காரணங்கள் இருந்தன. எந்த ஒரு போரும் முதல் போரிலேயே முடிந்து விடுவதில்லை . இரண்டாவது ஒரு படை திரட்டி தாக்குவது என்பது இன்று வரை எல்லா போர்களிலும் நடந்திருக்கிறது. சரித்திரங்கள் பற்றி படித்தவர்களுக்கு இது தெரியக்கூடும்…

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :