கங்கை கொண்ட சோழன் பாகம் 2

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 568
Weight800 grams
₹480.00 ₹432.00    You Save ₹48
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பசுமையான வயல்களும், பாறைகளும் மிகுந்த கலிதண்டி என்ற கிராமத்தில் சோழப்படை உறுதியாக அமர்ந்திருந்தது. கலிதண்டியிலிருந்து நாற்பது காதம் வடக்கே நகர்ந்தால் வேங்கியின் தலைநகரம் இருந்தது. கலிதண்டியிலிருந்து சற்று கிழக்கே அரைநாள் நடையில் கடற்கரை இருந்தது. கலிதண்டி மேடாக இருந்தது. எனவே பள்ளத்து பகுதியை பாதுகாக்க பள்ளத்தி விருந்து யாரும் மேலே வராமல் இருக்க ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்து சோழ வீரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
பறை ஒலியை எழுப்பியவர்களும், கள்ளி, காரையை செதுக்கியவர்களும், பாதையைச் செப்பனிடுபவர்களும், குதிரைப் படையும், காலாட் படையும், யானைப்படையும், தேர்ப் படையும் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு காத தூரத்திற்கு குடியிருந்தன. முதல் காதத்தில் எக்காளம் ஊதினால் இரண்டாம் காதத்தில் அது தெரியும், இரண்டாம் காதத்தில் எக்காளம் ஊதினால் மூன்றாம் காதம் விழித்துக் கொள்ளும். மூன்றாம் காதத்தில் எக்காளம் ஊதினால் நான்காம் காதத்தில் இருக்கின்ற வீரர்கள் தயாராகி விடுவார்கள். எக்காளத்திற்கு விதவிதமான ஓசைகள் உண்டு. எழுந்து நில் என்றும், தயாராய் இரு என்றும், நடந்து முன்னேறு என்றும் எக்காளங்கள் சொல்லும், எக்காளம் வாசிப்பவர்க்கு அது கைவந்த கலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :