கடவுள் சந்தை

ஆசிரியர்: மீரா நந்தா

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 314
ISBN978-81-7720-260-1
Weight350 grams
₹300.00 ₹255.00    You Save ₹45
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உலகளாவிய சந்தையில் ஒன்றிணைவது, வளரும் நாடுகளில் மரபுவழி வருகின்ற மதநம்பிக்கையின் சக்தியைப் பலவீனப்படுத்துகிறது என்று பாரம்பரிய ஞானம் சொல்கிறது. ஆனால் இந்தப் புதுவழி வகுக்கும் நூலில் மீரா நந்தா இன்றைய இந்தியாவில் இப்படி நிகழவில்லை என்று வாதிடுகிறார், மதச்சார்பின்மை வளர்ந்து வருகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, குறிப்பிடத் தக்கவாறு இந்துமதமும் நவ-தாராளக் கருத்தியலும் பின்னிப் பிணைதலை இந்தியா கண்டுவருகிறது. இது வளரும் முதலாளித்துவ வகுப்பினால் தூண்டவும்படுகிறது. இதன் விளைவாக, அரசு நிறுவனங்களை இந்து நிறுவனங்கள் இடம்பெயர்க்கின்றன. இந்துப் புத்துயிர்ப்பே ' ஒரு பெருவணிகமாக, மூலதனக் குவிப்பிற்கு ஒரு முக்கிய ஆதாரமாக மாறிவிட்டது. இந்த வளர்ச்சியின் வேர்களைத் தேடுவதோடு, அதன் எதிர்காலச் சாத்தியம் பற்றியும், உலகின் இரண்டாவது மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் மதச்சார்பின்மை, சமதர்மம் இவற்றின் போராட்டம் பற்றியும் மீரா நந்தா இந்த நூலில் விவரிக்கிறார்.'மதச்சார்பின்மையாக்கம் என்றால் என்ன, எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இந்தியாவில் உலகமயமாக்கலின் தாக்கத்தைப் பற்றியும், முக்கிய அரசியல்-சமூக சக்தியுடன் ஒரு சந்தை பொருளாதாரச் கதியாக ந் மதத்தைப் பற்றியும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்தப் புத்தகக் கை வசிய ம் படிக்க வேண்டும் - II மீரா நந்தாவின் எழுத்து, உலகமெங்கும் பரந்த சந்தையிடத்தின் கலாச்சாரச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது; தெளிவாகவும் ஈர்ப்பாகவும் இருக்கிறது; ஆழ்சிந்தனையைத் தூண்டுகின்றது. இதன்மூலம் நம்மை புதியதோர் உலகத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :