கடவுள் வந்திருந்தார்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 112
Weight100 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு நீல ஸ்பாட் விளக்கு மட்டும் நடுவே நின்றுகொண்டிருக்கும் சீனிவாசன் மேல் விழுகிறது. பின்னணியில் இருட்டு. (சீனிவாசன் சபையினரைப் பார்த்து நிற்கிறார். கையில் ஒரு கோட்டு, காலர் இல்லாத சட்டை, இடுப்பிலே பெல்ட் வேஷ்டி, வயது 55) நமஸ்காரம். எல்லாரும் வந்தாச்சன்னு நினைக்கிறேன். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே சில அறிமுக வார்த்தைகள், என் பேர் எஸ்.எஸ். சீனிவாசன். சமீபத்தில் எனக்கு சில வினோதமான விஷயங்கள் எல்லாம் நடந்தன. சில விசித்திரமான விஷயங்களைப் பார்த்தேன். பார்த்ததை பார்த்தபடி சொன்னது தப்பாப் போய் எக்கச்சக்கமாய் போய்டுத்து. உண்மை என்கிறது என்ன? ஆதிசங்கரர் ஒரு கேள்வி கேட்டார். “பாக்கறதுக்கு ஒருத்தருமே இல்லைனா ஆகாசம் அப்பவும் நீலமா இருக்குமாடா''ன்னுட்டு. ஏன்? ஒரு ஆள் பார்த்தாக் கூட போறாது. ரெண்டுபேர் பார்த்து ஒத்துப் போனாத்தான் உண்மைக்கே ஒரு வடிவம் வரதுன்னு நினைக்கிறேன். புரியாமப் பேசறேன் இல்லே? நீங்க பாருங்க. பார்த்ததும் புரியும். முதல்லே இருந்து சொல்றேன். அன்னிக்கு சனிக்கிழமைன்னு நினைக்கிறேன் (பின்னணியில் மெலிதாக சுப்ரபாதம் ஒலிக்கிறது). ஆபீஸுக்கு கிளம்பிண்டிருந்தேன். நான் ஒரு சாதாரண ஆசாமி. சாதாரணக் குடும்பம். மனைவி, மகள்... சாதாரண நாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :