கடைசியாக ஒருமுறை

ஆசிரியர்: அரவிந்தன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 120
ISBN978-93-84641-37-5
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில்
இணைகின்றன, மரணம்தான் அந்த நேர்க்கோடு, மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் , என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் , நபி என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் இதற்குப்பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு தான் ஒன்றுமில்லை என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :