கடைசி பக்கம்

ஆசிரியர்: நிதர்ஸனா

Category நாவல்கள்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaper back
Pages 160
Weight200 grams
₹125.00 ₹117.50    You Save ₹7
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீதிக்கதைகள் குழந்தைகளுக்கானவை என்கிற நினைப்பு ஆண்டாண்டு காலமாக இங்கு இருக்கிறது. அது தவறு! குழந்தைகள் பளிங்கு போன்றவர்கள். நாம்தான் மாசு சேர்க்கிறோம். அதைச் செய்யாமல் இருக்க, பெரியவர்களுக்குத்தான் இங்கு நீதி போதனை அதிகமாகத் தேவைப்படுகிறது. மொழிகள் பிறந்தபோதே நீதிக்கதைகளும் பிறந்துவிட்டன. விலங்குகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியை தம் சந்ததிகளுக்கு கற்றுத் தர நினைத்த முன்னோர்கள், இனிப்பு கோட்டிங் தடவிய கசப்பு மருந்துகளாக அவற்றை கதைகளுக்குள் அடைத்துக் கொடுத்தார்கள்.ஆப்ரிக்க நாடோடி இனத்தவர்களிடமும் கதைகள் இருக்கிறது; ஐரோப்பிய நாடோடி இனத்தவரிடமும் கதைகள் உண்டு. தங்களுக்குத் தெரிந்த விலங்குகள், சூரியன், நிலா, நெருப்பு என கதைகளில் கேரக்டர்களை உருவாக்கினார்கள் அவர்கள். அந்த மரபு இன்றுவரை தொடர்கிறது. கம்ப்யூட்டர், ஐ பாட் போன்ற கருவிகள் எல்லாம் கதைகளில் கேரக்டர்கள் ஆக, செவிவழியாக பரிமாறப்பட்ட கதைகள் இப்போது மின்னஞ்சல் சுற்றில் உலா வருகின்றன. சங்க இலக்கியங்களையாவது எழுதியவர்கள் யார் என்று தெரிகிறது. ஆனால் இந்தக் கதைகளை உருவாக்கிய பிதாமகர்களை யாருக்கும் தெரியாது. இப்போதைய மின்னஞ்சல் குழுக்களில் கதைகளை உருவாக்கி சுற்றுக்கு விடுபவர்கள்கூட, தங்கள் பெயர்களைப் போட்டுக்கொள்ளாமல் தவிர்க்கிறார்கள். இப்படிப்பட்ட பல கதைகள் ‘குங்குமம்’ இதழில் வாரா வாரம் கடைசி பக்கக் கதைகளாக வந்தன. லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கதைகளின் தொகுப்பு இந்த நூல்..

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

சூரியன் பதிப்பகம் :