கம்பரசம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹40.00 ₹34.00    You Save ₹6
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“எந்த நாட்டிலும் நம்பொணாக் கதைகள் உண்டு: அது போல் இங்குமுண்டு; அதை உணராது, பூதேவர்களின் புராணதிகளை அலசிக் காட்டுகிறாயே. அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே; யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்? அந்தக் காலம் மலையேறிவிட்டது. இப்போது இலக்கியங்களிலே உள்ள ரசம்' இருக்கிறதே, அதைத்தான் பருகி இன்புறுகிறோம். அதிலும், கம்பரசம் பருகப்பருக இனிக்குமப்பா பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும், அதை அருமை பெருமை! உணர்ச்சி உற்சாகம் எழுச்சியாகவும் உன் உள்ளத்திலே பொங்கும், கலாரசிகனாக வேண்டும் என்றால். கம்பரசம் பருக வேண்டும்!" என்று இலக்கியம் கற்ற இன்சொல் நண்பரொருவர், எனக்கு உபதேசித்தார் கணிவுடன்.
என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம் அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார். நான் ஒரு டோஸ் உள்ளுக்குச் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத் தைத்தான்! ஆஹா நான் கண்ட இன்பத்தை என்னென்பேன்! "நாலடிப் பாடலடி குதம்பாய்! நர மதன் விடுகணையடி. அடிக்கு அடி ரசந்தான் குதம்பாய் அற்புத காமரசம்!" என்று பாடினாலும் போதாது. அதன் இலட்சணத்தை விளக்க கலாரசிகர்களின் அனுபவத்தைக் கண்டறியாது கையில் நெருப்புப் பந்தமெடுத்தோமே என்று கூடத் துக்கிப்பீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

வாழ்க்கை வரலாறு :

பாரி நிலையம் :