கம்பராமாயணம் - சுந்தர காண்டம்
ஆசிரியர்:
உ.வே.சாமிநாதையர்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1373-3781-6996-3834
{1373-3781-6996-3834 [{புத்தகம்பற்றி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இராமாயணப் பாடம் சொல்லும் விதத்தை நினைந்து நெகிழ்ந்துரைக்கின்றார். “ மகாவித்து வான் அவர்கள் உடல் நலம் குன்றிய நிலை யிலும் தினந்தோறும் நூறு அல்லது நூற்றைம்பது பாடல்களுக்கு விளக்கம் தருவார். அவர் பாடம் சொல்வதைப் பூரணமாக அனுபவித்தார். இராமாயணப் பாடல்கள் அவர் தளர்ந்த நிலையில் மருந்தாக உதவின என்பார். இடையிடையே கம்பரது வாக்கைப் பாராட்டி உருகுவார். சில பாடல்களை மீண்டும் மீண்டும் பல முறை படிக்கச் செய்து கேட்டு அனுபவிப்பதில் அதிக இன்பம் இவருக்கு இருந்தது. சில பாடல்களுக்கு அவர் வார்த்தைகளால் பொருள் சொல்லவில்லை. கண்ணீர்விட்டு உருகிநின்ற அவர் மெய்ப்பாடுகள் உரை கூறின. இனிமேல் இப்படி யார் பிறக்கப் போகிறார்கள். என்ன அழகு? என்ன அழகு? யோசித்து பாடிய பாட்டுக்களா இவை? இயற்கையாக வருகிற வாக்கின் நயந்தான் எப்படி இருக்கிறது என்பார். கம்பர் பாடலை நாமும் உணர்ந்து இன்புறுகிறோம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866