கம்ப்யூட்ராலஜி

ஆசிரியர்: காம்கேர் கே.புவனேஸ்வரி

Category அறிவியல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 448
Weight600 grams
₹310.00 ₹294.50    You Save ₹15
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இந்த மூன்று தொழில்நுட்பங்களே இன்றைய உலகை இயக்கிக்கொண்டிருக்கின்றன.
உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கல்வி, வங்கி, நூலகம், தியேட்டர் என எல்லாமே, ஒரு மவுஸ் கிளிக்கில் நாம் இருக்கும் இடத்துக்கு வேகமாக வந்து சேரும் காலத்தில் வாழ்கிறோம்.
உலகளாவிய தகவல் பரிமாற்றத்துக்கும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கும், பேருதவி செய்துகொண்டிருக்கும் ஒரே தளம் இணையம். சைபர் வேர்ல்ட் என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த உலகத்தில் பாதுகாப்பாகப் பயணிக்கும் சூட்சுமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தொழில்நுட்பத் தளத்தில் உலவ நினைக்கும் அத்தனை வலைதளங்களுக்கும் இன்டர்நெட்டில் பல அற்புதமான வசதிகள், சாமானியனையும் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்ய உதவுகின்றன.
உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதும் தான் செய்யும் தொழிலை விளம்பரப்படுத்தி, லாபம் அதிகரிக்கச் செய்யவும் தொழிலை விரிவுபடுத்தவும் பல உபயோகமான தகவல்களைச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சமாகும்.
கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இன்றைய காலக்கட்டத்துக்கு எவ்விதங்களில் உதவுகின்றன? தெரிந்த சாஃப்ட்வேர்கள் மற்றும் வலைதளங்களில் தெரியாத ஆப்ஷன்களால் தொழில்நுட்பத்துக்கு என்ன பயன்? - இதுபோன்ற கேள்விகளுக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நாம் தினமும் பயன்படுத்தும் ஃபைல்களைக் கையாள்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், விடையளிக்கிறது இந்த நூல்.
லேப்டாப்பில் உள்ளதை டி.வி-யில் பார்ப்பது எப்படி? நம் கம்ப்யூட்டரை தடுமாறச் செய்வது என்ன? நாம் இறந்த பிறகு நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட் என்னவாகும்? திறமையைச் சம்பாத்தியமாக்க உதவும் சமூக வலைதளங்கள் என்னென்ன? பிசினஸுக்கு யுடியூபைப் பயன்படுத்துவதன் உத்திகள் எவை... இதுபோன்ற பல நுட்பமான தகவல்களை விரிவாக, விளக்கப் படங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி.
இதுபோன்று இன்னும் பல தகவல்களால், உங்கள் சந்தேகங்களை நீக்கி இணையத்தில் இணைந்து தெரியாததைத் தெரிந்து வெற்றியடைய வழிகாட்டுகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
காம்கேர் கே.புவனேஸ்வரி :

அறிவியல் :

விகடன் பிரசுரம் :