கருவூரார் பலதிரட்டு (கருத்துரையுடன்)

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category ஆன்மிகம்
Publication தாமரை நூலகம்
FormatPaper Back
Pages 155
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கருவூரார் பலதிரட்டு என்ற இந்த நூல் - மற்ற சித்தர்களின் நூல்களைப் போல் - வாதம், வைத்தியம், யோகம், ஞானம் பற்றிய பாடல்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
சிறப்பாக மாந்திரிகம், மறைப்பு மைகள், பாதாள லோகப் புதையல் இருக்குமிடம், மறைந்துள்ள பொருள்களைக் காட்டுபவைகளைப் பற்றியும், மாந்திரிகத்திற்குரிய அஷ்டகர்மங்களைப் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
மருந்துச் சரக்குகளைப் பற்றிய பாடல்கள் குறைவாகவே உள்ளன என்றாலும் தயாரிக்கும் முறைகள், உட்கொள்ள வேண்டிய காலம் பற்றி மிக நுட்பமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
அறுபத்து நான்கு வகை மூலிகைகளைப் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் சில பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு பாடல்களில் மூலிகைகளின் அடையாளம் கூடக் கூறப்பட்டுள்ளது
எங்குள்ள மூலிகைகள் சிறப்பானவை, அவற்றைப் பறிப்பதென்றால் எந்த நாளில் காப்புக் கட்டவேண்டும், என்ன பலி கொடுக்க வேண்டும், என்ன மந்திரம் சொல்லிப் பறிக்கவேண்டும் என்பன போன்ற விஷயங்கள் இந்த நூலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்று கூறலாம்.
கருவூரார் பலதிரட்டு என்ற இந்த நூலின் மூலப்பிரதியை ஏற்கெனவே அச்சான நூல்களிலிருந்து ஒரு பகுதியும், ஓலைச் சுவடிகளிலிருந்து ஒரு பகுதியுமாகத் திரட்டிக் கொடுத்தவர் சேலம் கொண்டலாம்பட்டி பூலாவாரி கிராமத்தைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்ற இளைஞர். இவருடைய தாத்தா அச்சிட்ட நூல்களாகவும், ஓலைச் சுவடிகளாகவும் சேகரித்து வைத்திருந்த நூல்களை ஆராயப் புகுந்து சித்தர் இலக்கியத்தில் அளவு கடந்த ஈடுபாடு கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
இந்த நூலில் உள்ள பாடல்களுக்கு இவர் வழங்கியுள்ள கருத்துரையும் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்த நூல் வெளி வருவதற்குக் காரணமாக அமைந்த இவருக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம்.
ஆர். சி. மோகன்,
பதிப்பாசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

ஆன்மிகம் :

தாமரை நூலகம் :