கலாம் காலம்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category கல்வி
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 130
ISBN978-93-81020-46-3
Weight150 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அப்துல் கலாம்.
இந்திய பாதுகாப்பு அறிவியலின் அடையாளப் பெயர். இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தந்தை. இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். இந்தியா தனக்கென்று செயற்கைக் கோள் ஏவுகலங்களையும், ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து, பாதுகாப்பு துறையில் சுயசார்பு அடைவதற்கு காரணமானவர். எஸ்.எல்.வி.3 செயற்கைக் கோள் ஏவுகலத்தை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்தி, பிருத்வி, அக்னி என்று பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம், பாகிஸ்தானையும், சீனாவையும் இந்திய ஏவுகணை வளையத்திற்குள் கொண்டுவந்தார். 60-களிலும் 70-களிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் முக்கியமான நபராக இருந்தார். 80-களின் இறுதியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக் கூடத்தில் ஏவுகணைகளோடு வாழ்க்கை நடத்தினார். 90-களில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் தூண்டு கோலாக மாறினார். பாரத ரத்னா விருது பெற்றார். நாம் காணும் கனவு நிச்சயமாக நனவாகும் என்பதற்கு கலாம் வாழ்கின்ற உதாரணமாகி விட்டார். சிறுவயதில் இவருடைய தந்தை, இவர் கலெக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இவர் பறவையைப் போல பறக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அக்கினிச் சிறகுகளுடன் ஏவுகணைப் பறவைகளைப் படைத்தார். இந்தியாவின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

கல்வி :

நக்கீரன் பதிப்பகம் :