கலைஞரின் தளங்கள்

ஆசிரியர்: திருவேணி வே. காசிநாதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-80220-96-3
Weight250 grams
₹100.00 ₹94.00    You Save ₹6
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தலைவர் கலைஞர் அவர்களின் பன்முகத் திறமையைப் பற்றி விரிவான எடுத்துக்காட்டுகளுடன் எழுதியிருக்கிற "கலைஞரின் தளங்கள்” என்ற நூலினைப் படித்தேன். வழக்கறிஞர் தேவக் கோட்டை வே. காசிநாதனும் - டாக்டர் வெ. திருவேணியும் அழகுற அமைந்திருக்கின்ற இந்தத் தோரணங்கள் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றிய நூல்களில் மிகவும் மிளிரக்கூடியது என்றால் அது மிகையாகாது.
வழக்கறிஞர் வே. காசிநாதன் அவர்கள் நீதிமன்றத்தில் திறமையாக வாதாடக் கூடியவர். இந்தக் கட்டுரைகளிலும் எடுத்த பொருளுக்கு நீதி சேர்க்க, அவர் கொடுத்திருக்கிற உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வுமிக்க குடும்பத்திலிருந்து தலைவர் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாக இருக்கின்ற வழக்கறிஞர் காசிநாதன் அவர்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது.
கலைஞரின் ஆட்சித்திறன் - படைப்பிலக்கியத் திறன் - சொல்லாடல் என அனைத்து நிலைகளிலும் நின்று ஆசிரியர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். வழக்கறிஞர் காசிநாதன் அவர்கள் நிறைய துறைகளில் செய்திகளை அறிந்தவர். மேன்மேலும் நிறைய எழுத்துப்பணியாற்றி, மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன்.

-ஆர்க்காடு நா. வீராசாமி.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

வே. காசிநாதன் :

வாழ்க்கை வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :