கல்கியின் கள்வனின் காதலி

ஆசிரியர்: கல்கி

Category நாவல்கள்
Publication சரண் புக்ஸ்
FormatPaperback
Pages 256
Weight300 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முத்தையன் அங்கிருந்து நீந்திச் சென்று குளத்தில் தாமரைகள் பூத்திருக்கும் இடத்தை அடைகிறான். ஒரு தாமரைப் பூவைப் பறிப்பதற்காக அதனிடம் அணுகுகிறான். என்ன பிரமை இது? பூ இருந்த இடத்திலே ஓரிளம் பெண்ணின் சிரித்த முகம் காணப்படுகிறதே! முத்தையன் தலையை ஒரு தடவை குலுக்கியதும் முகம் மறைந்து மறுபடி பூ ஆகிறது. முத்தையன் அந்தப் பூவை அடிக்காம்போடு பலமாகப் பிடித்து இழுத்துப் பறிக்கிறான். அப்பா! என்ன கோபம்! என்ன ஆத்திரம்! கோபத்தையும் ஆத்திரத்தையும் அந்தப் பூவினிடமா காட்ட வேண்டும்? பூவைத்தான் பறிக்கலாம்! மனத்திலுள்ள ஞாபகத்தை அந்த மாதிரி பறித்து எறிந்துவிட முடியுமா? முத்தையன் பூவுடனே இரண்டு தாமரை இலைகளையும் பறித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறுகிறான். கிராமத்தை நோக்கி நடக்கிறான். அவனைப் பின் தொடர்ந்து நாமும் செல்வோம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

நாவல்கள் :

சரண் புக்ஸ் :