கல்கியின் சிறுகதைகள் (பாகம்-1)

ஆசிரியர்: கல்கி

Category சிறுகதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 204
Weight200 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அத்தியாயம் ஒன்று சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்குநான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள். மாமா! இப்போதெல்லாம் நீங்கள் ஏன் கதையே எழுதுவதில்லை ? என்றாள். யுத்தத்தினால் காகிதம் ரொம்பக் கிராக்கியென்றும், நானே எழுதிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் எழுதுவதை விகடனில் போட முடியாதல்லவா என்றும், இம்மாதிரி அவளுக்கு ஏதேதோ சால் ஜாப்பு சொன்னேன். முக்கியமான காரணத்தை மட்டும் அவளுக்குச் சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்?
உலக வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பார்க்க கதையாவது காரணமாவது என்று எனக்குத் தோன்றிவிடுகிறது. கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. ஒரு விசேஷமென்னவென்றால், அந்த அதிசய சம்பவங்களைக்குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை. இப்படியும் நடக்குமா என்று எண்ணுவதில்லை. வெகு தூரத்தில் நடந்த சம்பவமானாலும் பத்திரிகைகளில் வந்துவிட்டால் பூரணமாய் நம்பிவிடுவார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சிறுகதைகள் :

பாரதி பதிப்பகம் :