கவிக்குயில் சரோஜினி தேவி

ஆசிரியர்: எம்.ஏ.பழனியப்பன்

Category வாழ்க்கை வரலாறு
Publication அறிவுப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 110
ISBN978-81-8804-899-2
Weight150 grams
₹95.00 ₹92.15    You Save ₹2
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அகோரநாத் சட்டோபாத்தியாயர்! பங்களாதேஷ் நாட்டில் உள்ள பிரம்மண நகரின் கிராமத்தில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய மூதாதையர்கள் சமஸ்கிருதத்தில் பெரும் புலமை படைத்த பண்டிதர்கள். அகோரநாத் சட்டோபாத்தியாயாவுக்கு அப்போது வயது பதினான்கு இருக்கும்! அவன் படகு ஒன்றில் ஒன்பதே வயதான ஒரு பேதைச் சிறுமியைக் கண்டான்! அச்சிறுமியை அவன் கண்டபோது, அவனுள் எழுந்த நினைவு எப்படி இருந்தது தெரியுமா? அந்தச் சிறுமி அவன் நினைவில் அரை தேவதையாகவும், அரை மனிதப் பிறவியாகவும் தோன்றினாள்! அந்தச் சிறுமியின் பெயர் வரதசுந்தரி! வரத சுந்தரியோ பரம ஏழை. கல்கத்தா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அகோரநாத் சட்டோபாத்தியாயா என்ற இளம் மாணவனிடம் புத்தகங்களை இரவல் கேட்டுப் பெற்று, இரவு முழுவதும் தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்தாள். பகலானதும் புத்தகத்தைத் திருப்பித் தந்துவிடுவாள்! இப்படியாக, வரதசுந்தரியின் படிப்பு இருந்துகொண்டிருந்தது! ஆனால், அகோரநாத் சட்டோபாத்தியாயா தன் கல்விக்காக தானே உழைத்தான். அவன் படிப்பில் மகா கெட்டிக்காரனாக விளங்கினான். பல்கலைக்கழக மாணவனாக அவன் இருந்த பொழுதே, கிரேக்கம், ஈப்ரூ, பிரெஞ்ச், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய மொழிகளைக் கற்றான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஏ.பழனியப்பன் :

வாழ்க்கை வரலாறு :

அறிவுப் பதிப்பகம் :