கவிச்சக்கரவர்த்தியின் பணிவு

ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்

Category ஆய்வு நூல்கள்
Publication The Roots
FormatPaper Back
Pages 144
Weight200 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு படைப்பை வாசிக்கிற போது. படைப்பாளனும் எனக்கு அருகில் இருந்து, அமர்ந்து, என் வாசிப்பை உற்று நோக்குவதாக நான் எப்போதும் உணர்கிறேன்.
படைப்பும் வாசிப்பும் வேறல்ல என்றாகிற போது சில படைப்புகளில், சில தருணங்களில், படைப்பாளி நமக்குள் வந்து அமர்ந்து கொள்கிறான். தன் படைப்பின் நுட்பம் குறித்தும், ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் பற்றியும், அவன் நம்மோடு அந்தரங்கமாக உரையாற்றுகிறான். உரையாடுகிறான்.
வள்ளுவன் தொடங்கி இன்றைய படைப்பாளி வரை எல்லோருமே வாசிப்பின் போது என் அருகில் இருப்பவர்களே. படைப்பாளி அருகில் இருந்து நான் வாசிப்பதை உற்று நோக்காத படைப்புகளை, என்னால் வாசிக்க முடிந்ததில்லை. இந்த உணர்வை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அருகில் இருப்பதாக நான் உணர்வது, எனது உரிமையும், ஈடுபாடும் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாரதி கிருஷ்ணகுமார் :

ஆய்வு நூல்கள் :

The Roots :