கவிதைக் கலை

ஆசிரியர்: நா.பா

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கவிதைக் கலை என்னும் இந்நூல்யான் அவ்வப்போது தமிழ்நாட்டு வார, மாத இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி. அக்கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வருகின்றன. தமிழ்நாட்டு வாசகர்களின் அன்புக்கும் சிந்தனைக்கும் இந்தக் கலைவிருந்தை ஆர்வத்தோடு படைக்கிறேன்.
கலையை வணங்க வேண்டுமென்ற எண்ணம் தெய்வத் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக வந்த கொள்கை. இதயத்தைத் தூய்மைப் படுத்துவது எதுவோ, அதுதான் கலை.
அப்படியானால் கவிதையைக் கலையாகச் சொல்வதில் - நினைப்பதில் பிழையில்லை. இக் கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றி. என் அன்பு நண்பர் சுகி சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரை என்னைப் பெருமைப்படுத்துகிறது.
நெஞ்சில் கவிதை ஆர்வம் எத்தகைய உணர்ச்சிகளைப் பெருகச் செய்ததோ, அவற்றின் விளைவாக எழுதப்பெற்ற இக் கட்டுரைகள், படிக்கும் அன்பர் மனங்களிலும் அதே உணர்ச்சி களை உண்டாக்குமானால் என் பெறற்கரிய பேறாக அதைக் கருதுவேன். பல்வேறு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதையைப் பற்றி எழுதப் பெற்ற இக்கட்டுரைகள் பொருளமைப்பில் வேறுபட்டனவாயினும் பொதுவில் சிந்தனைக்கு ஒருமையான அமைப்புடையவைகளே.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.பா :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :