காசும் பிறப்பும்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 415
Weight300 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அந்த மாலை வேளையில் மாமரத்துக் கிளைகளில் பச்சைக் கிளிகள் அமர்ந்து வேகமாய் பேசத்துவங்கின. ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்திய சீனு வாசன் கிளிகளைப் பார்க்க முடியாமல், சப்தம் மட்டும் கேட்டு மெல்ல கண்களை மூடிக்கொண்டான். கிளிகளை மனத்தில் உருவகப்படுத்திக் கொண்டான். அவைகள் அசைந்து நகருவதையும், ஒன்றையொன்று கவ்விக்கொள்வதையும், சிறகால் அடித்துக் கொள்வதையும், வெளியே படபடத்து லேசாய் உரசிக் கொள்வதையும், அவைகளின் கூடல், முயற்சி களையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். கிளிகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.ஆனால், கண்விழிக்க முடியவில்லை. கண்களை திறக்க முயற்சித்த போது, வேண்டாம் என்று யாரோ தடுத்தது போல, இமைகளில் லேசாய் விரல் வைத்து அழுத்தியதைப் போல ஒரு கனம் உணர்ந்தான். இமைகளில் படர்ந்த கனம் மெல்ல நெற்றிப் பொட்டுக்குப் போயிற்று. தலை ஆழ்ந்து தலை யணைக்குள் புதைந்து விடுவது போல் இருந்தது. தலையணையின் நடுவே யாரோ அழுத்தியது போலும் இருந்தது. தலையில் பாரம் ஏற்படுவதை சொல்ல வேண்டும் என்று நினைத்தான். ஆனால் சொல்ல முடியவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :