காடோடி
ஆசிரியர்:
நக்கீரன்
விலை ரூ.270
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?id=1801-9031-2721-4997
{1801-9031-2721-4997 [{புத்தகம் பற்றி காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல. தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் | இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பணி நிமித்தம் ஓர் உல்லாசப் பயணிபோல உள்நுழைகிறான் கதைசொல்லி. ஆனால் கண்ணெதிரே மரங்களும் காட்டுயிர்களும் தொல்குடிகளின் வாழ்வும் சிதைவது கண்டு பதற்றம் - 1 கொள்கிறான். மனசாட்சியின் நகங்கள் பிறாண்டுகின்றன. மழைக்காட்டின் மரணத்துக்கு சாட்சியாக வாழ நேரும் அவனுடைய துயரமும் அவலமும் இப்பிரதி முழுக்கக் காடோடியாய் அலைந்து திரிந்து அதை வாசகருக்கும் தொற்றவைக்கின்றன. தமிழில் இதுவரை யாரும் தொடாத களம்; காட்டழிப்பின் பின்னுள்ள நுண் அரசியலை ஒலியற்ற குரலில் சொல்வதன் மூலம் அழிக்கப்பட்ட காடுகளையும் அழிக்கப்படுகிற காடுகளையும் இந்நாவல் நம் கண்முன்னே விரிக்கிறது. கவிஞரும் சூழலியல் எழுத்தாளருமான நக்கீரனின் முதல் நாவல் இது.
<br/>} {புத்தகம்பற்றி நக்கீரன் நவீன கவிஞர், கட்டுரையாளர், குழந்தை இலக்கியவாதி, சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ்ப் பசுமை இலக்கியத்தில் இவருடைய எழுத்து தனித்தன்மை கொண்டது. இந்நூல் மூலம் நாவலாசிரிய ராக உருவெடுத்திருக்கிறார். தட்டான்கள் பறக்கும் மழைக்காலம் என்பது இவர் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல். என் பெயர் ஜிப்சி என்னும் இவருடைய கவிதை நூல் 2012ஆம் ஆண்டுக்கான 'விகடன் விருதை வென்றது. 2014ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இவர் எழுதிய மழைக்காடுகளின் மரணம் அதிகம் விற்பனையான முதல் பத்து புத்தகங்களுள் ஒன்றாக இடம் பெற்று சாதனை படைத்தது. திருடப்பட்ட தேசம், கண்ணுக்கு தெரியாமல் களவுபோகும் நீர் ஆகியவை இவருடைய பிற நூல்கள். இவற்றில் கடைசி நூலானது ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனைவி, மகளுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசிக்கிறார்.
<br/>} {ஆசிரியர் உரை நக்கீரன் நவீன கவிஞர், கட்டுரையாளர், குழந்தை இலக்கியவாதி, சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ்ப் பசுமை இலக்கியத்தில் இவருடைய எழுத்து தனித்தன்மை கொண்டது. இந்நூல் மூலம் நாவலாசிரிய ராக உருவெடுத்திருக்கிறார். தட்டான்கள் பறக்கும் மழைக்காலம் என்பது இவர் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல். என் பெயர் ஜிப்சி என்னும் இவருடைய கவிதை நூல் 2012ஆம் ஆண்டுக்கான 'விகடன் விருதை வென்றது. 2014ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இவர் எழுதிய மழைக்காடுகளின் மரணம் அதிகம் விற்பனையான முதல் பத்து புத்தகங்களுள் ஒன்றாக இடம் பெற்று சாதனை படைத்தது. திருடப்பட்ட தேசம், கண்ணுக்கு தெரியாமல் களவுபோகும் நீர் ஆகியவை இவருடைய பிற நூல்கள். இவற்றில் கடைசி நூலானது ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனைவி, மகளுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசிக்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866