காதலாகிக் கனிந்து

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 472
Weight350 grams
₹205.00 ₹174.25    You Save ₹30
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கதிரவனின் அசைவுக்குள் காலம் நிர்ணயிக்கின்ற நாம், கடவுள் என்ற விஷயத்தை ஆராய்வது பானைக்குள் இருந்த தவளைகள் வானம்பற்றி பேசுவதுபோல நகைப்புக்குரியது. ஆனாலும், தவளைகள் பேசத்தான் பேசும். பேசாதிருக்க அவைகளால் முடியாது. ஏதேனும் ஒரு தவளை பேச்சு நிறுத்தி பானையின் வாய்வழியாக வெளியே வந்து வானம் பார்த்து விழிவிரிய திகைத்து நிற்றல் போல மனிதர்களில் சிலர் இவ்வித அபைவத்திற்கு ஆட்படுகின்றனர். வெளியே குதிக்க தவளை பானையின் விளிம்புக்குள் நின்று, போதும் பேசுவதை நிறுத்துங்கள். நீங்கள் நினைப்பதுபோலல்ல வானம் என்று சொன்னாலும் உள்ளிருக்கிற தவளைகள் பேச்சை நிறுத்தாது.
எதற்கு சொல்வது, ஏன் பேச்சு என்று வெளியே குதித்த தவளை பேசாமல் வானத்தை அனுபவிப்பதோடு நின்று விடவும் கூடும். இந்த உலகத்தில் பல உன்னதபுருஷர்கள் இப்படித்தான் கடவுள் என்பதை அனுபவித்து வாய்திறந்து சொல்லமுடியாது ஆழ்ந்த மௌனத்தில் அடங்கிப் போயிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :