காயமே இது மெய்யடா

ஆசிரியர்: போப்பு

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் திசை
FormatPaperback
Pages 160
ISBN978-81-944489-0-7
Weight200 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உடலைப் போற்றி வளர்த்த பண்பாடு நம்முடையது. அதனால்தான் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருக்கிறார். உயிரைத் தனியாக வளர்க்க முடியாது. உடம்புதான் அதற்கு அடிப்படை. உடம்பைப் பேணி வளர்த்து, சரியாகப் பராமரித்தால் மட்டுமே உயிர் வளரும்நீடித்திருக்கும்.
நமது முன்னோர் இதை சிறப்பாக உணர்ந்திருந்தார்கள். ஆனால், எதிலும் அவசரம் என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் பலரும் பொருள் தேடி ஓடுகிற அளவுக்கு, உடம்பைப் பேணுவதில்லை, பாதுகாப்பதில்லை, போற்றுவதும் இல்லை. உடல் என்ற அடிப்படைச் சொத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்கத் தொடங்கிவிட்டோம். அதை எப்படிச் சீர்படுத்துவது?
பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார்.நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல, ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
போப்பு :

உடல்நலம், மருத்துவம் :

தமிழ் திசை :