கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 160
ISBN978-93-87573-42-0
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் மொழியைக் கற்றதுடன் -ஆய்வுசெய்தார் - ஏன் - மொழி இலக்கணமும் எழுதத் தொடங்கிவிட்டார். அதுதான் புகழ்பெற்ற "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்பதாகும். இந்த நூலினுக்கு நூறு பக்கங்களுக்கும் மேலான முன்னுரை எழுதினார்.
அந்த ஆங்கில முன்னுரையினைச் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநரான தருமபுர ஆதீன வித்துவான் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார். அவர்தம் மொழிபெயர்ப்புப் பணிக்கு உடனிருந்து பேருதவி புரிந்தார் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்.
ஜி. ஏ. கிரீயர்சன் எழுதியுள்ள "மொழியாராய்ச்சி" என்னும் ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழாராய்ச்சியாளர்க்குப் பயன்படும் வகையில், இந் நூலின் பிற் சேர்க்கையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டவையேயாம். நாற்பதாண்டுகளுக்கு முன்னர்ச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இம் முயற்சியில் ஈடுபட்டுத் தமிழ்த்தொண்டாற்றியுள்ளமை பாராட்டத்தக்கது.
அப் பகுதியை - இப்பொழுது மாணவர்க்குப் பேருதவியாக இருக்கும்பொருட்டு எங்களது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :