கிய்யா கிய்யா குருவி

ஆசிரியர்: அகிலா கண்ணன்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 313
Weight250 grams
₹290.00 ₹275.50    You Save ₹14
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கிய்யா.. கிய்யா.. குருவியோடு நான்!
அகிலா கண்ணனின் கதைகள் பெரும்பாலும் மிகுந்த திருப்பங்களுடன் பயணிக்கும். அதேபோல இந்தக் கதையிலும் துர்கா, இலக்கியா எனும் இரு நாயகிகளுடன், விஜயபூபதி எனும் ஒரு நாயகனுடன் கதை துவங்குகிறது. காதலியாக, துர்கா. காதலை சரியாகச் செய்திருக்கிறாள். இலக்கியா உரிமைப் போராட்ட குணத்துடன் உறவுக்காரியாக அறிமுகமாகிறாள். அத்தை, தன்னை வார்த்தைகளின் மூலம் தேளாகக் கொட்டியதும், அத்தானின் ரகசியத்தைக் கொட்டிவிடும், அவசரக் கெட்டிக்காரி. காதலை காதலியிடம் காட்டுமிடத்தில் ஆகட்டும், தனது ஊழியர்களுக்கான நலனில் அக்கறை கொள்வதாகட்டும், அதன்பின் மனைவியிடம் தனது உரிமையை நிலைநாட்டுமிடத்தில் ஆகட்டும், பெற்றோரிடம் தனது அன்பையும், மரியாதையையும் காட்டுமிடத்தில் ஆகட்டும், அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் கதாநாயகன். துர்காவின் பெற்றோரின் நிலை நியாயப் படுத்தப்பட்ட காட்சியமைப்புகளும் அருமை. காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தரும் என்பதையும், அதையே வாழ்க்கை என எதிர்காலத்தை இழந்துவிடக்கூடாது என்பதையும், கதையின் வாயிலாக கூற முனைந்திருக்கிறார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா கண்ணன் :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :