கிருஷ்ணா 5-பூ மலரும் புல்லாங்குழல்
ஆசிரியர்:
ஓஷோ
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+5-%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+?id=1032-4155-3058-4862
{1032-4155-3058-4862 [{புத்தகம் பற்றி முதலாவதாகக் கண்ணன் செயல்களிலிருந்து விடுபட வேண்டுமென்று சொல்லவில்லை. செயல்களின் பயன்களையே துறக்க வேண்டும் என்கிறான். நீங்கள் செயலற்றுக் கிடக்கவேண்டுமென்று அவன் சொல்லவில்லை. ஒரு நோக்கம் கருதிச் செய்ய வேண்டாம். உங்கள்பார்வை பலன்களின் மீது இருக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறான்.

செயலுக்கும், செயலின் பயனுக்கும் இடையில் அர்த்தமுள்ள வேறுபாடு இருக்கின்றது. செயலில் மட்டும் மிகுந்த ஈடுபாடு காட்டும்போதுதான், அந்தச் செயல் உண்மையானதாகவும் அமைகின்றது. எல்லா அறிஞர்களுமே பயனுக்கான ஆசைகளை விட்டுவிடத்தான் சொல்கிறர்கள்.

பலனை எதிர்பாராமல் செயல்படு, என்பதுதான் கண்ணனது உபதேச மையம்.

செயல் முழுமையாக நடைபெற வேண்டும். கண்ணனது உபதேச சாரம் இதுதான் : செயலில் முழுமை என்பது நீங்கள் செய்துமுடித்தபின் மிச்சம் எதுவும் இல்லை; அப்புறம் அதைப் பற்றிக் கவலைப்பட எதுவுமே இல்லை என்பதுதான்.

மிச்சம் மீதி ஏதாவது இருக்குமானால்தான் அதன் விளைவுக்காக, பலனுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டிவரும் அப்போது, அது முழுமை பெறவில்லை என்று பொருள். நீங்கள் எந்தப் பலனையும் பரிசையும் எதிர்பார்க்கவில்லையென்றால் நீங்கள் செய்த செயல் பூரணமானதாகி விடும்.

அதனால்தான் கண்ணன் பலனைக் கடவுளிடம் விட்டுவிடு! என்கிறான். கடவுள் என்றால் உங்களையெல்லாம் கவனித்துப் படியளக்க, கணக்காயரும், நிர்வாக மேலாளருமான ஒரு ஆள், சுவர்க்கத்தில் எங்கோ உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்று அர்த்தமல்ல. கடவுளிடம் விட்டுவிடு என்றால் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் மற்றதை இந்தப் பிரபஞ்ச இருப்பிடம் விட்டு விடுங்கள் என்று பொருள்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866