கிருஷ்ண மந்திரம்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 328
Weight250 grams
₹160.00 ₹136.00    You Save ₹24
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்புடன் திரு. பாலகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம். பல ஆண்டுகளாக தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும். தங்களிடம் பேச வேண்டும் விவாதிக்க வேண்டும் என ஆசைகள் பல பல. 'மெர்க்குரி பூக்கள்' நாவல் தான் உங்களை நேசிக்க வைத்தது.
இருபது ஆண்டுகளாக தங்களுக்கு வாசகர் கடிதம் எழுத நினைத்து எழுதாமல் வருடங்கள் பல கடந்தாலும் உங்களின் எழுத்து எப்பொழுதும் என் அருகாமையில் இருந்து என்னை நல்வழியில் அழைத்து சென்றிருக்கின்றன. சிந்திக்கவும் வைத்துயிருக்கின்றன. இரண்டு வார மன பேராட்டத்திற்கு பின்பு முதன் முதல் எனக்குள் நிகழ்ந்ததை தங்களிடம் பகிர்ந்துக் கொள்ள இத் தபால் எழுதுகிறேன்.
3/4/05 அன்று ஸ்ரீ கிருஷ்ணாஸ்வீட் ஏற்பாட்டில் 'குறையொன்றுமில்லை' நிகழ்ச்சியில் தங்களை நேரில் பார்த்து பேசும் பாக்கியம் கிடைத்தது. எத்தனை ஆண்டுகள் அட்டை படங்களில் தங்கள் புகை படம் பார்த்த நான் முதன் முதலா ஸ்ரீ கோதாண்டராமசுவாமி சன்னதியில் என் அருகில் நீங்களும் திரு கிருஷ்ணன் அவர்களும். மனசு முழுவதும் சந்தோஷம்.
இரண்டு மணி நேர தங்களின் பேச்சு சிந்திக்க தூண்டியது. மகிழ்ச்சிகளையும் தந்தது.
தேடியவன் கண்டுக் கொள்வான், ஜன்னல் திறந்து அமைதியாக காத்திரு, தென்றல் வந்தாலும் வரலாம். அரங்கத்தின் மொத்த உட்டமும் தங்கள் பேச்சில் புத்துணர்வு பெற்றனர். நானும் தான். தங்களிடம் ஆசிர்வாதம் வாங்க நீ, நான் என்று முந்தும் தங்கள் வாசகர்கள் எனக்குள்ளும் ஆசை வந்தது

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :