கிறித்துவத்தின் உள்ளீடு தேசிய விடுதலை இறையியலே!
ஆசிரியர்:
குணா
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87%21?id=1027-2655-4682-6589
{1027-2655-4682-6589 [{புத்தகம் பற்றி தி, பி. 2023 நளி 25(கி. பி. 1992 திசம்பர் 10) அன்று வெங்காலூரி லுள்ள தூய பேதுரு (இராயப்பர்) குருமடத்தில் (St. Peter's Seminary) நடத்திய கூட்டமொன்றில் நான் ஆற்றிய உரையே அடுத்த ஆண்டில் ஒரு குறுநூலாக வெளிவந்தது.
<br/>புதுச்சேரி மறைமாவட்டத்திற்குரியது அந்தக் குருமடம். அதை எப்படியாவது கைப்பற்றிக் கருநாடகத்திலிருக்கும் திருச்சவைகளில் தமிழையும் தமிழ்க்குருக்களையும் ஒழித்துக்கட்டிக் கன்னடத்தை மட் டுமே திருச்சவை வழிபாட்டு மொழியாகச் செய்ய வேண்டுமெனத் துணிந்த கன்னட இனவெறியர்களின் சூழ்ச்சிகள் அத்தனையையும் தவிடுபொடியாக்கிச் செம்மாந்து நிற்கும் அறிவுக்கூடம் அது.
<br/>அக் குருமடத்தில் படித்துவந்த பயிற்சி மாணவர் ஒருவர் என்னிடம் வந்து அம் மடத்தில் நாற்பது ஆண்டுகளாக இயங்கி வருகிற தமிழ்க் கழகத்தின் விழாவில் நான் பங்கேற்று உரையாற்ற வேண்டுமென மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். பல்லாண்டுகளாக எனக்கு எந்தச் சமயத் தொடர்புகளும் இருந்ததில்லை . ஆயினும், அவர் விடுத்த அழைப்பைத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டேன். கிறித்துவ குருமடத்து மாணாக்கரிடம் ஆற்ற வேண்டிய உரை என்பதால், திரு விவிலியத்தை மேற்கோள்களாகக் காட்டி நான் பற்றி நிற்கும் தமிழர் தேசியக் கருத்தியலின்பால் ஆற்றுப்படுத்த எண்ணி விவிலியத்தைப் புரட்டிக் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டேன். அவற்றை வைத்து என் உரையையும் எழுதிக்கொண்டேன். !
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866